2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் ஹூசைனியாபுரத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (19) பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

ஹுசைனியாபுரம் அல் பலாஹ் ஜூம்மா பள்ளியின் தலைவர் உப அதிபர் எம்.உவைஸ் தலைமையில் குர்ஆன் மதரசா கட்டடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பள்ளி பரிபாலன சபை, உலமாக்கள், கிராம அபிவிருத்தி சங்கம்,  இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நவீன் துசார அபேரத்ன கலந்துகொண்டு பல்வேறுபட்ட சட்ட ஆலோசனைகளை சினேக பூர்வமாக எடுத்துரைத்தார்.

மேலும், ஜனவரி மாதத்திலிருந்து பாடசாலை ஆரம்பம் மற்றும் முடிவு நேரங்களில் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தமது ஒத்துழைப்புக்களைப் பொலிஸாருக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .