2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

மாணவர் கண்காட்சியும் சிறுவர் சந்தையும்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட சமீரகம முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் மாணவர்களின் கைப்பணிப் பொருட்களின் கண்காட்சியும், சிறுவர் சந்தையும் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

"தரமான சமுதாயத்திற்கு தரமான கல்வி" எனும் தொனிப்பொருளில் இந்த கண்காட்சி இடம்பெற்றது. ஐந்தாம் வகுப்பு வரையுள்ள இப்பாடசாலையின் மாணவர்கள் வியக்கத்தக்க பல பொருட்களை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தன.

கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் சேகு அலாவுதீன், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு இந்தf; கண்காட்சி மற்றும் சிறுவர் சந்தையினை ஆரம்பித்து வைத்தனர்.

வெவ்வேறு பிரிவுகளாக கண்காட்சிக்கான விடயங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும்,  கண்காட்சியில் பங்கெடுத்த ஏனைய சகல மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .