A.P.Mathan / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
புத்தளம் நுரைச்சோலையில் அமைந்துள்ள அனல்மின் நிலையத்தில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்தினால் பாரிய புகைமூட்டம் மேலெழுந்திருப்பதாகவும் மேலதிக தகவல்களை பெறமுடியாத நிலை காணப்படுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே இத்தீவிபத்து ஏற்பட்டதாக அறியமுடிகிறது.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் பேச்சாளரிடம் வினவியபோது... தீ விபத்து ஏற்பட்டதனை உறுதிசெய்த அவர், 95 விகிதமான தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும் தொடர்ந்தும் விமானப்படை, கடற்படையினரின் உதவியுடன் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும், இவ்விபத்தில் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.
6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025