Super User / 2011 மார்ச் 28 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.வீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுகாதார கல்வி பிரிவின் பிரதம அதிகாரி அதுல இந்திரஜித் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் சுமார் பத்து பேர் டெங்கு நோய்க்குட்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் அநுராதபுரம் நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ளவர்களாகும் என அவர் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் பரவுவதற்கு ஏதுவான இடங்கள், கழிவுப் பொருட்கள் போன்றவைகளை சுத்தப்படுத்தும் மற்றும் அகற்றும் நடவடிக்கைகள் தொடராக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .