2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவத் தலைவர்களுக்கு பதக்கம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

புத்தளம்  ஸாஹிரா ஆரம்பப் பிரிவு பாடசாலை  மாணவத் தலைவர்களுக்கு  பதக்கம் அணிவிக்கும் வைபவம்  நேற்று திங்கட்கிழமை மாலை  நடைபெற்றது.

ஸாஹிரா ஆரம்பப் பிரிவு  அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மி தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில்  புத்தளம் பொலிஸ் தொகுதி  பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.தர்மசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.  புத்தளம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.தர்மகுமார், புத்தளம் வடக்கு கோட்டக் கல்விப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஏ.டீ.எம்.நிஜாம்,  பாடசாலை அபிவிருத்தி  சங்க செயலாளர்  ஏ.என்.எம். ரஸ்மி  உட்பட பாடசாலை அபிவிருத்தி  சங்க  உறுப்பினர்களும்  இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

மாணவ தலைவர்கள்  பதவி பதவிப்பிரமாணம் செய்து கொண்டதோடு அதிதிகள் அவர்களுக்கு பதக்கங்களை அணிவித்தனர்.  பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .