2021 ஜூலை 29, வியாழக்கிழமை

பொது நூலகம் அமைக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் பிரதேசசபைக்குற்பட்ட மதுரங்குளி நகரில் பொது நூலகமொன்றை அமைத்துக் கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கு முன்னர் புத்தளம் பிரதேச சபையால் மதுரங்குளி நகரில் நடத்தி வந்த பொது நூலகம் இருந்த இடத்திலிருந்து மக்கள் நடமாட்டம் குறைவான  இடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மதுரங்குளி நகருக்கு வருகை தரும் பொது மக்களும்,  பாடசாலை மாணவர்களும் தமது நூலகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும்  கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, மதுரங்குளி நகரில் பொது நூலகமொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .