2021 ஜூலை 29, வியாழக்கிழமை

வானிலை தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சிறுவர்களுக்கு வானிலை தொடர்பான விடயங்களை அனுபவத்துடனும் நேரடியாகவும் தெளிவுபடுத்தும் நிகழ்வுவொன்று நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு புத்தளம் இந்து மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

வானிலை தொடர்பான விடயங்களை சிறுவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வை புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் மாவட்ட சிறுவர்சபை என்பன வானிலை ஆராய்ச்சி திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்டிருந்தன.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்ணான்டோ, வானிலை ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சுமார் 250 சிறுவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .