2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

பாலப்பழம் பறிக்க முற்பட்டவர் பலி

முஹம்மது முஸப்பிர்   / 2017 மே 24 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலப்பழம் பறிப்பதற்காக, பால மரத்தில் ஏறிய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், மரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளாரென, சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனமல்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கருணா விஜேராஜ (வயது 46) என்ற குடும்பஸ்தரே,  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர், தனது இரண்டு பிள்ளைகளுடன் பாலப்பழம் பரிப்பதற்காக, தனது வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள வெஹெரபெந்திவெவ நீர்த்தேக்கப் பிரதேசத்துக்குச் சென்று, அங்கிருந்த பால மரமொன்றில்  ஏறியுள்ளதாகவும், இதன்போதே அவர் மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்துள்ளாரென, மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்திலிருந்து வீழ்ந்த நபர், உடனடியாக அங்கிருந்து இஹல புலியங்குளம் அளுத்கம பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக, அங்கிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் அங்கு அவர் உயிரிழந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .