2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மொனராகலை சிறையில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு

Editorial   / 2017 மே 24 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகளில் சர்வ மத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதன் ஊடாக நல்ல சமூகமொன்றினை கட்டியெழுப்பும் திட்டத்துக்கு அமைவாக, மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால், இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் காலை 10 மணிக்கு  நடைபெற்ற இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.என்.சீ தனசிங்க உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .