2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆறுமாத காலத்தினுள் டெங்கு நோயாளர்கள் 31 பேர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 27 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆறுமாத காலத்தினுள் மாத்திரம் நாடாளவிய ரீதியில் 20, 731 டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். 

அவர்களில் 4761 பேர் மேல் மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு மாத காலத்தில் மாத்திரம் 31 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கடந்த காலங்களில் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, களனி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த குப்பை குழங்களை அகற்றுவதற்குத் தாமதமானமையும், டெங்கு நுளம்பின் பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X