Princiya Dixci / 2016 ஜூலை 25 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம்.சனூன்
புத்தளம், வான்வீதி, காடையாக்குள வீதி (நூர்பள்ளி வீதி) ஆகிய இருவீதிகளையும் புனரமைப்பதற்கான அங்குராற்பண நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) மேற்கொள்ளப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரான ஏ.ஆர்.எம். அலிசப்ரியின் மக்கள் பணிமனைக்கு அருகிலேயே இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
வாணிப, கைத்தொழில் அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ஆகியொரின் தலையீட்டில் 60 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இரு பாதைகளும் புனரமைக்கப்படவுள்ளன.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி, முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமனற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.




48 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago
4 hours ago