2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

தாமாகவே முன்வந்து வீதியைச் செப்பனிட்ட கிராமத்தவர்கள்

Editorial   / 2017 நவம்பர் 06 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், ஆனமடுவ பகுதியில், 10 ஆவது மைல்கல், மஹகும்புக்கடவல வீதி, நீண்டகாலமாகச் செப்பனிடப்படாமல் கைவிடப்பட்டதையடுத்து, ஒப்பந்தக்காரரால் கொண்டுவரப்பட்டிருந்த பொருட்களைக் கொண்டு, செப்பனிடும் பணியைப் பொதுமக்கள் ஆரம்பித்துள்ளனர்.

வீதியை செப்பனிடுவதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த போதிலும், குறித்த ஒப்பந்தக்காரர், இது தொடர்பில் அக்கறை கொள்ளாததால் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.

செப்பனிடும் இப்பணியில், 15 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த வீதியைச் செப்பனிடுவதற்குரிய பொருட்கள், கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட போதிலும், பணிகள் எவையும் முன்னெடுக்கப்படாமை குறித்து, பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் சாதகமான பதில் கிடைக்காத காரணத்தால், பொதுமக்களின் பங்களிப்புடன், வீதி செப்பனிடப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X