2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபருக்கு விளக்கமறியல்

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இசெட்.ஷாஜஹான்

வீதியில் செல்லும் பெண்களின் தங்கநகைகளை பறித்தல், மோட்டார் சைக்கில் திருட்டு,  கடைகள் மற்றும் வீடுகளை உடைத்து திருடுதல் போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபரை, எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு மேலதிக நீதவான், நேற்று உத்தரவிட்டார்.

 படல்கம மேனக என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.    பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், நீர்கொழும்பு, கொட்டதெனியாவ, பன்னல, கிராந்துரு கோட்டே, திவுலபிட்டிய ஆகிய பிரதேசங்களில் பல்வேறு குற்றங்களை புரிந்துள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X