Editorial / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலகம்வெவ பகுதியில் பாழடைந்த கிணற்றில் விழுந்து ஐந்து வயது சிறுமியொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த தினம் சிறுமியின் தந்தை தொழிலுக்காகச் சென்றுள்ளார். சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் சிறிய தாயாரின் அரவணைப்பில் இருந்துள்ளார். அன்றைய தினம் சிறுமியைக் காணாததால் சிறிய தாய், அயலவர்களின் உதவியை நாடி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுமி வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிணற்றிலிருந்து சிறுமி மீட்கப்படும்போதே உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தம்புளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025