2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பொஸன் பண்டிகை பாதுகாப்பை முன்னிட்டு அநுராதபுரத்தில் 4000 பொலிஸார் கடமையில்

Menaka Mookandi   / 2012 மே 31 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

பொஸன் உற்சவ காலத்தில்  பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 4000ற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

பொஸன் விழா தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து விளக்கமளித்த அவர்,

'பொலிஸார் தந்திரிமலை, மிஹிந்தலை, அநுராதபுரம் நகரம் மற்றும் மஹமெவுனா பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை இலங்கையிலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளிலும் கடமை புரியும் குற்றத்தடுப்புப் பிரிவின் இருநூறு அதிகாரிகள் சிவில் உடையில் பாதுப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெளிப் பிரதேசங்களிலிருந்து அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைப் பகுதிகளுக்கு வருகை தரும் பக்தர்களின் நன்மை கருதி விசேட போக்குவரத்து சேவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு அநுராதபுரம்- மிஹிந்தலைகளுக்கு ,டையிலாக  விசேட போக்குவரத்து சேவைகளுக்காக 90 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்தோடு அநுராதபுரம் மிஹிந்தலைக்கிடையில் 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை 56 விசேட புகையிரத சேவைகளும் நடாத்தப்படவுள்ளன. 3ஆம் திகதி 12 சேவைகளும் 4ஆம் திகதி 24 சேவைகளும் 5ஆம் திகதி 22 புகையிரத சேவைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை கொழும்பு, மாத்தறை, மஹவ பகுதிகளிலிருந்து 24 விசேட புகையிரத சேவைகளும் நடாத்தப்படவுள்ளன. பக்தர்களில் குளங்களில் குளிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களைத் தடுப்பதற்காக  முன்னூறு உயிர்காப்பு வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொஸன் உற்சவ காலத்தில் அநுராதபுரம் நகரத்தினுள் 70 அன்னதான நிகழ்வுகளும், மஹிந்தலை மற்றும் தந்திரிமலைப் பகுதிகளில் 25 அன்னதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X