2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மகளிர் சுய தொழில் திட்டம்: ரூ.10 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸாவின் கருத்திட்டத்தில் உருவான பெண்களை சுய தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 100 இலட்சம் ரூபா பெறுமதியான சுய தொழில் உபகரணங்களை பெண்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பாரியார் சட்டத்தரணி புஷ்பா ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா. நீர்கொழும்பு மேயர் அன்ரணி ஜயவீர, நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், மேல்மாகாண சபை உறுப்பினர்களான சாபி ரஹீம், மெரில் பெரேரா மற்றும் பெரும் எண்ணிக்கையான பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சக்கர நாற்காலிகள், தையல் இயந்நிரங்கள், மீன்பிடித் தெப்பங்கள், சமையலரை உபகரணங்கள், அழகுக் கலை பாடநெறியை பூர்த்தி செய்த 80 யுவதிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபா உதவிப் பணம் மற்றும் சான்றிதழ் வழங்கள் உட்பட மேலும் பல சுயதொழில் உபகரணங்கள் அங்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை நிமல்லான்ஸா அமைப்பு மற்றும் மீனவ பெண்கள் ஒன்றிணைந்த அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .