2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளம் பஸ் விபத்தில் 16 பேர் காயம்

Super User   / 2012 மே 12 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம். ஹிஜாஸ்)

புத்தளம் - அனுராதபுர வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்தள்ளனர். குறித்த சிறிய ரக பஸ் கொழும்பு - வெல்லம்பிட்டியிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருக்கையிலேயே புத்தளம் 6ஆம் மைல் கல்லில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 3 சிறுவர்களும் உள்ளடங்குவர். காயமடைந்தவர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாரதியின் தூக்க மயக்கமே இவ்விபத்துக்கு காரணமாகவிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X