2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் வீசிய கடும் காற்றினால் 89 வீடுகள் சேதம்

Super User   / 2012 நவம்பர் 01 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


புத்தளம் மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் 89 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட காரியாலயம் தெரிவித்தது.

இதில் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளடன் 86 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இவ்வாறு சேதத்திற்குள்ளாகிய வீடுகளின் விபரங்கள் தற்பொழுது கிராம சேவகர்களின் ஊடாக திரட்டப்பட்டு வருவதாகவும் புத்தளம் மாவட்ட காரியாலயம் குறிப்பிட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட காரியாலயத்தின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சில தினங்களாக புத்தளத்தில் பெய்து வரும் அடை மழையினால் பாடசாலைகள் நீரில் மூக்கியுள்ளள.
இதனால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளருக்க அறிவிக்கப்பட்டுள்ளன.

பாடசாலையில் வெள்ள நீர் காணப்படுவதால் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. எனினும் வழமை போன்று பாடசாலை இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X