2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1400 பேர் அநுராதபுர மாவட்டத்தில் கைது

Super User   / 2012 ஜூலை 25 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

கடந்த சுமார் ஒரு மாத கால பகுதிக்குள் அநுராதபுர மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நீதிமன்றங்களினால்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1400 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதி முதல் இன்று புதன்கிழமை வரை அநுராதபுர மாவட்டத்திலுள்ள 21 பொலிஸ் நிலையங்களதும் பொலிஸ் அதிகாரிகள் தலைமையில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புக்களின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொலை, களவு, கொள்ளை, பாலியல் துஷ;பிரயோகம், நிதி மோசடி, சட்டவிரோத மதுபான விற்பனை ஆகிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர்கள் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக வாழ்ந்து வந்தவர்கள் எனவும் அநுராதபுரம் பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன மேலும் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .