2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

டி – 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Super User   / 2012 ஜூன் 05 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் டி – 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்குரிய 30 ரவைகள் ஆகியவற்றை புத்தளம் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர்.இதன்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து தில்லையடி பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய தேடுதலின் போது குறித்த சந்தேக நபர் ஆயுதங்களுடன் வீட்டிலிருந்து மற்றுமொரு இடத்துக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்த நிலையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X