2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிலாபம் பஸ் விபத்தில் 10 பேர் காயம்

Kogilavani   / 2012 மே 11 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ். எம். மும்தாஜ், ஜூட் சமந்த)

சிலாபம், குருநாகல் வீதியில் கொன்னவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற பஸ் வித்தில் பத்து பேர் காயமுற்று சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிங்கிரிய பிரதேசத்திலிருந்து சிலாபம் நோக்கி சென்று கொண்டிருந்த சிலாபம் டிபோவுக்குரிய பஸ் வண்டி ஒன்றே மின்கம்பம் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களுள் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தயசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

காயமடைந்தவர்களுள் பஸ் வண்டியின் சாரதி, நடத்துனர் உட்பட பாடசாலை மாணவர்கள் இருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0

  • SA Friday, 11 May 2012 09:26 AM

    Raising accidents, So many accidents every day. who is going to get solution? god only knows.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X