2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் 10 பேர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

 2010ஆம் ஆண்டு முதல் இன்றுவரை புத்தளம் மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி 10 பேர் உயிரிழந்த அதேவேளை, 37 காட்டு யானைகளும் உயிரிழந்ததாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டில் மாத்திரம் புத்தளம் மாவட்டத்தில் 7 காட்டு யானைகள் உயிரிழந்ததுடன், மூவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.

2011 மற்றும் 2012ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்; 24 காட்டு யானைகள் உயிரிழந்ததுடன், மூவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.

2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் 5 காட்டு யானைகள் உயிரிழந்ததுடன்,  நால்வர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர் எனவும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகள்  திணைக்களம் கூறியுள்ளது. 

நவகத்தேகம மற்றும் கருவலகஸ்வௌ போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகவும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X