2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 06 பேர் உட்பட  பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  மேலும் 06  பேரையும் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போதே இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில்; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையால்; இவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி 06 பேரில் இருவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து  வைத்திருந்ததாகக் கூறப்படும் 02 பேரையும் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும்  ஒருவரையும் ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும்  ஒருவரையும் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்றதாகக் கூறப்படும் 02 பேரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

அத்துடன், மணல் ஏற்றிச்சென்ற 02 லொறிகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். 

மேற்படி சந்தேக நபர்களை  புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X