2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் 15 ஆமைகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                           (எஸ்.எம்.மும்தாஜ்,அப்துல்லாஹ்)


புத்தளம், பொத்துவில்லு பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்திருந்ததாகக் கூறப்படும்  14 கறுப்பு ஆமைகளையும் ஒரு பால் ஆமையையும் இன்று திங்கட்கிழமை காலை கைப்பற்றிய  புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின்  புராதன பொருட்கள் தொடர்பக சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரொருவரையும் கைதுசெய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி வீடொன்றில் ஆமைகள் வளர்க்கப்படுவதாக புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலையடுத்து  சோதனை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது இவ் ஆமைகள் கைப்பற்றப்பட்டதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையரொருவருக்குச் சொந்தமான காணியொன்றிலேயே இவ் ஆமைகள் வளர்க்கப்பட்டன.  இச்சோதனை நடவடிக்கையின்போது இக்காணியின் காவலாளியாக தொழில் புரிந்தவரே பொலிஸாரினால் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட ஆமைகளுடன் சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X