2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிறுவன் கடத்தல் விவகாரம்: தாய்க்கு பிணை,தந்தை உட்பட 16 பேருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரி, நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்டதற்கு பின்னர் இடம்பெற்ற சம்பவத்துக்காக சிறுவனின் தாய் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் தந்தை உட்பட 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கல்கமுவை நீதவான் நீதிமன்றத்தினாலேயே நேற்று வியாழக்கிழமை மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஐவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்த சட்டத்தரணிகளின் வாகனங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்களுக்கு மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருகோடி ரூபாய் கப்பம் கோரி, அநுராதபுரம், மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் தந்தை மற்றும் தாயை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனான தமிந்து யஷின் ஏக்கநாயக்க  ஜூலை 28ஆம் திகதி திங்கட்கிழமை இரவு கடத்தப்பட்டார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரே வீட்டிலிருந்த பெற்றோரை தாக்கிவிட்டு அவர்களுடைய நான்கு வயது மகனை கடத்திச் சென்றனர்.

சட்டத்தரணிகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்றே இந்த 17 பேருக்கும் எதிராக  குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில்,சிறுவனின் தாயை ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் 17 ஆம் திகதி புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் டீ.எம் ருவன் தம்மிக்க, ஐவரின் விளக்கமறியலை ஒக்டோபர் 1ஆம் திகதி வரையிலும் நீடித்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X