2025 மே 23, வெள்ளிக்கிழமை

'சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 1600பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்'

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டோரில் 1600பேர் நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத அவுஸ்திரேலியப் பயணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டுத் திரும்பிய ஜயலத் எம்.பி, ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே அவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு விரைவில் பிணை வழங்கப்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X