2025 மே 15, வியாழக்கிழமை

புத்தளத்தில் 20 வீடுகள் பொதுமக்களிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகள் பொதுமக்களிடம் நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன.

குவைத் அரசாங்கத்தின் 'பைதுஸ் ஸகாத்' நிதியத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகளே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.  புத்தளம் பெரியபள்ளியில் இயங்கும் 'பைதுஸ் ஸகாத்' நிதியத்தினால் மணல்குன்று பிரதேசத்தில் இந்த வீடமைப்புத் திட்டத்திற்கென காணி கொள்வனவு செய்யப்பட்டு இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

இந்தப் பிரதேசத்தில் உள்ள வசதி குறைந்த வீடு அற்ற  குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர் யாகூப் யூசுப் அல் அதீகி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக், புத்தளம் பெரியபள்ளியின் தலைவர் எஸ்.ஆர்.எம்.முஸம்மில், புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அசோக பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பிரதேசத்தில் மேலும் 20 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக குவைத் நாட்டுத் தூதுவர் இங்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .