2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மல்வத்து ஓயா பெருக்கெடுப்பால் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                                                  

 

அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக மல்வத்து ஓயா பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அநுராதபுரம் - அழுத்கம பிரதான வீதியின் ஊடாக குறுக்கறுத்துச் செல்லும் மல்வத்து ஓயாவுக்கு மேல் இடப்பட்டுள்ள பாலத்திற்கு மேலாக சுமார் எட்டு அடி உயரத்தில் நீர் பாய்வதால் அழுத்கம உட்பட சுமார் 20ற்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இப்பிரதேச மக்கள் அநுராதபுரத்திற்குச் செல்லும் மற்றொரு வீதியான அநுராதபுரம் - பரஸன்கஸ்வௌ வீப்தியின் இஹலகொட்டியாவ குளத்திலிருந்து வான் பாய்வதனால் சுமார் ஒன்றரை அடி நீர் வீதியை குறுக்கறுத்துச் செல்கிறது.

இதன் காரணமாக இவ்வீதியின் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் உட்பட பல பிரிவினரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X