2025 மே 23, வெள்ளிக்கிழமை

'அக்வா லைப் - 2012' அலங்கார மீன் இனங்களின் கண்காட்சி

Super User   / 2012 செப்டெம்பர் 23 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ். எம். மும்தாஜ், அப்துல்லாஹ்)


'அக்வா லைப் - 2012' எனும் அலங்கார மீன் இனங்களின் கண்காட்சி மாதம்பையிலுள்ள கூட்டுறவு சங்க வேழா மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.

இதன் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கண்காட்சியை பார்வையிட்டார். அமைச்சருடன் வட மேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க மற்றும் வட மேல் மாகாண கடற்றொழில் அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சின் ஒத்துழைப்புடன் புத்தளம் மாவட்ட அலங்கார மீன் உற்பத்தியாளர்களின் சங்கத்தினரால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X