2025 மே 23, வெள்ளிக்கிழமை

வடமத்திய வைத்தியசாலைகளில் 385 வெற்றிடங்கள் நிலவுகின்றன

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                           

வடமத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் 35 வைத்தியர்கள் மற்றும் 350 தாதியர்கள் வெற்றிடங்கள் நிலவுவதாக வடமத்திய மாகாண சுகாதார, ஆயுர்வேத, போக்குவரத்து அமைச்சர் எச்.பீ.சேமசிங்க தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்தினுள் மாகாணசபையின் கீழ் 89 வைத்தியசாலைகள் இருப்பதோடு தாதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வெற்றிடங்களும் நிலவுகின்றன.  3 வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய சில வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறையினால்  ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையாற்றும் நிலைமையும் காணப்படுகிறது.

இதேவேளை, வதிவிடம் உட்பட அடிப்படை வசதிகளற்ற கிராமிய வைத்தியசாலைகளில் கடமையாற்ற வைத்தியர்கள் விரும்புவதில்லையென்பதோடு கிராமிய வைத்திசாலைகள் பலவற்றில் பல்வேறு குறைபாடுகளும் நிலவுகின்றன.

தாதியர்களை வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு வருடாந்தம்  நியமிக்கின்றபோதிலும், அந்த எண்ணிக்கையில்  பற்றாக்குறை நிலவுவதினால் இந்த எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் நோக்கில்; ஓய்வூதியம் பெற்ற தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதோடு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X