2025 மே 09, வெள்ளிக்கிழமை

மழைக்காரணமாக 50 குடும்பங்கள் வெளியேற்றம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


கடும் மழைக்காரணமாக சிலாபம் பிரதேசத்தில் 50 குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சிலாபம், கடுபிட்டி ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்து அருகிலிருந்த கலப்பினுள் பாய்ந்ததால் கலப்பின் நீர்மட்டம் அதிகிரித்து கிரமாங்களுக்குள் புகுந்துள்ளது.

இதன்காரணமாக, சிலாபம் வட்டக்களி, அளுத்வத்தை, அம்பரிதிவெள்ள, மைக்குளம், அலம்ப போன்ற பிரதேசங்களில்; கலப்பு பகுதிக்கு அண்மித்த தாழ்ந்த பிரதேசங்களில் வாழும் குடும்பங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.

வெள்ளப்பெருக்கினால் வீடுகளை விட்டு வெளியேறும் மக்களை அப்பிரதேசங்களில் உள்ள சனசமூக நிலையங்களுக்குச் செல்லுமாறு அந்தந்த பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.

இம்மக்களுக்கு சமைத்த உணவை வழங்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

சிலாபம் கலப்பை நோக்கி வரும் நீரை உடனடியாகவே கடலினுள் செல்லத்தக்க வகையில் கால்வாய் வெட்டும் பணியில் சிலாபம் அளுத்வத்தை மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X