2025 மே 24, சனிக்கிழமை

அநுராதபுரத்தில் 6 பிரதேசசபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஐ.ம.சு.கூட்டமைப்பில் இணைவு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 6 பிரதேசசபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஐ.தே.க.விலிருந்து விலகி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துள்ளனர்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இவர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திரஸ்பன பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தலைவருமான கே.பி.முனசிங்க, கஹடகஹதிகிலிய பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜே.திலகரட்ன, ரம்பேவ பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம்.சி.என்.சாலியரட்ன, கலென்பிந்துனுவெவ பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜகருண, கெக்கிராவ பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவர், இபலோகம பிரதேசசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுகத் ஹேரத் ஆகியோரே இவ்வாறு இணைந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் மிஹிந்தலை அமைப்பாளர்; ரோஹஷ புஷ்பகுமார உட்பட பிரதேசசபை உறுப்பினர்கள் நால்வரும் ஆளும் கட்சியுடன் இணைந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அநுராதரபுரம் சல்காது விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்தனர்.படங்கள்:- சுதத் சில்வா





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X