2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் 60 நலன்புரி நிலையங்கள்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜுட் சமந்த,அப்துல்லாஹ்)

புத்தளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை  தங்கவைப்பதற்காக 60 நலன்புரி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவந்த நிலையில், தெதுருஓயாவும் முன்னேஸ்வரக் குளமும் பெருக்கெடுத்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தின் 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் 8,618 குடும்பங்களைச் சேர்ந்த 28,060 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 60 நலன்புரி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்  புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 15 வான்கதவுகளும் இங்கினிமிட்டி நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகளும் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளன. அத்துடன், கலாஓயா மற்றும் மீ ஓயாவினதும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுவதாகவும்  புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மீ ஓயாவிற்கு கீழுலுள்ள பாவட்டமடு பிரதேசத்திலுள்ளவர்களை பாதுகாப்புடன் இருக்குமாறும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X