2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நாச்சியாதீவு பிரதேச விவசாயிகளின் நஷ்ட ஈட்டுக்காக 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
                           
நாச்சியாதீவு குளம் புனரமைக்கப்பட்டு வருவதனால் இம்முறை பெரும்போகத்தின் போது அப்பகுதியில் நெல் வேளாண்மையில் ஈடுபட முடியாத நிலை தோன்றியுள்ளது.

இதனால், குறித்த விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்வதற்காக அரசாங்கத்தினால் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாச்சியாதீவு குளம் புனரமைக்கப்படுகின்றமையினால் எட்டு அடி வரை நீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இம்முறை பெரும்போகத்தின் போது நெல் வேளாண்மைக்காக நீரை திறந்து விடுவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 60 மில்லியன் ரூபா பணத்தை நாளொன்றுக்கு ரூபா 500 வீதம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு விவசாயியும் நாளொன்றுக்கு 6 மணித்தியாலயங்கள் நீர்ப்பானத்துடன் தொடர்புடைய வேலைகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .