2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தளம் மாவட்டத்தில் 99 வேட்பு மனுக்கல் தாக்கல்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 27 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா, அப்துல்லாஹ்)

எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 99 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கட்சி சார்பாக 44 வேட்பு மனுக்களும், சுயேட்சை குழுக்கள் சார்பாக 55 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில் சிலாபம் நகர சபை, வென்னப்புவ பிரதேச சபை, நவகத்தேகம பிரதேச சபை ஆகிய இடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக புத்தளம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரவித்தார்.

அதேவேளை, சிலாபம் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவும் நாத்தாண்டிய பிரதேச சபைக்கு மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு கருவலகஸ்வெவ பிரதேச சபைக்கு லிபரல் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவுடன், 21 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .