2025 மே 23, வெள்ளிக்கிழமை

120 உள்ளூராட்சி உறுப்பினர்களின் மனுக்களை வாபஸ் பெற அறிவுறுத்தினேன்: பேர்ட்டி

Super User   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மத்திய மாகாண சபை முதலமைச்சராக தன்னை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதற்குத் தயாரான வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த 120 உள்ளூராட்சி உறுப்பினர்களின் மனுக்களை வாபஸ் பெறுமாறு மேற்படி உறுப்பினர்களுக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க கூறியுள்ளார்.

"அவர்கள் மிக இளமையானவர்கள். அரசியலில் நீண்டதூரம் பயணிக்க வேண்டியவர்கள். எனவே இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ராஜினாமா செய்வதை நான் ஊக்குவிக்கவில்லை. அப்படிச் செய்வது அவர்களுக்கு இழைக்கும் பெரும் அநீதியாகிவிடும்" என டெய்லி மிரருக்கு பேர்ட்டி பிரேம்லால் திஸநாயக்க கூறினார்.

வடமத்திய மாகாண சபையில் அமைச்சு பொறுப்புகள் எதையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் சாதாரண மாகாண சபை உறுப்பினராக தான் நீடிக்கப்பபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண  முதலமைச்சராக தன்னை மீண்டும் நியமிக்காவிடின் அம்மாகாணத்தை சேர்ந்த 120 உள்ளூராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்வர் என பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க முன்னர் கூறியமை குறிப்பிடத்தக்கது. (லக்னா பரணமான்ன)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X