Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 13 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியாதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சிலாபம் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜே. எம். ஜே. சீ. மடவல 15 வருட கடுழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளதுடன், பத்தாயிரம் ரூபாய் அபராதமாக செலுத்தவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டயீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இத்தண்டப் பணத்தைச் செலுத்த தவறின் மேலும் ஒரு வருடச் சிறைத்தண்டனையும் நஷ்டயீட்டைச் செலுத்த தவறின் மேலும் மூன்று வருடச் சிறைத்தண்டனையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இத்தண்டனைக் காலங்கள் வேறு வேறாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலாபம் அம்பகந்தவில பிரதேசத்தைச் சேர்ந்த எண்டனி வினீசியஸ் பெரேரா அச்சமயம் (43 வயது) என்பவருக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகந்தவில கிராமத்தில் வீடொன்றில் தனிமையில் இருந்த 15 (அச்சமயம்) வயதான சிறுமியை அதேப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான எண்டனி வினீசியஸ் பெரேரா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
13 minute ago
46 minute ago
51 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
46 minute ago
51 minute ago
21 Jul 2025