Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 08 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
கட்டுநேரிய, லங்சிகம பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி மரணமானதாக மாராவில பொலிஸர் தெரிவித்தனர். மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த முத்துகொடகே சானுக பெர்ணான்டோ எனும் 17 வயது இளைஞனே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தவராவார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த இளைஞனுடன் ஐவர் கட்டுநேரிய லங்சிகம பிரதேச கடலில் நீராடச் சென்றுள்ளனர். இவ்வாறு கடலில் நீராடிக் கொண்டிருக்கையில் பந்து விளையாடியுள்ளனர். இதன்போது விளையாடிய பந்து கடலுக்குள் சென்றுள்ளது.
இந்த பந்தை எடுப்பதற்காக பாய்ந்து சென்ற போதே இவ்விளைஞர் கடலில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இளைஞரின் உடல் இதுவரை கரையொதுங்காத நிலையில் சுழியோடிகளின் உதவியோடு உடலை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞரின் பெற்றோர் இத்தாலியில் வசிப்பதாகத் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை மாராவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
1 hours ago
2 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago
21 Jul 2025