Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 10 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
வடமேல் மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் அலங்கார மீன் வளர்ப்புக் குழுக்களை உருவாக்க தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமேல் மாகாண கடற்றொழில் மின்சக்தி, வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
தற்போது பாடசாலைகளில் உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டுக் குழுக்கள், விவாதக் குழுக்கள் போன்ற பல்வேறு குழுக்கள் போன்று இந்த அலங்கார மீன் வளர்ப்புக் குழுக்களும் உருவாக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் வட மேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பாடசாலைகளில் இந்த அலங்கார மீன் வளர்ப்புக் குழுக்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் அமைக்கப்படவுள்ளது.
இந்த பாடசாலைகளுக்கு தேவையான அலங்கார மீன் வளர்ப்பு டாங்கிகள் மற்றும் அலங்கார மீன் வகைகளும் வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சினால் வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இவ்வாறு பாடசாலைகளில் அமைக்கப்படும் இந்தக் குழுக்கள் பாடசாலையில் சகல வகுப்பறைகளிலும் அலங்கார மீன் வளர்ப்பினை உருவாக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு அலங்கார மீன் வளர்ப்பு தொடர்பில் பயிற்சிகளை வழங்கி அவற்றை நடாத்தி செல்வது தொடர்பிலும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் ஊடாக தமது வகுப்பறைகளில் அலங்கார மீன் வளர்ப்பு டேங்கிகளை உருவாக்கி நடாத்திச் செல்வதைப் போன்று தமது வீடுகளிலும் அலங்கார மீன் வளர்ப்பினை ஏற்படுத்த வழி ஏற்படும் எனவும் அமைச்சர் சனத் நிஷாந்த மேலும் தெரிவித்தார்.
7 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025