Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
ஒரு கோடிக்கு மேல் பெறுமதியான மாணிக்கக் கல்லெனக் கூறி பிளாஸ்டிக் துண்டுகள் சிலதைக் கொடுத்து மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வைக்கால் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
தான் வேலையொன்றின் நிமித்தம் வென்னப்புவ சென்று திரும்பும் வழியில் பஸ் தரிப்பிடத்தில் நின்றபோது, அந்த இடத்திற்கு வந்த சந்தேக நபர் தன்னிடம் ஒரு கோடிக்கும் மேல் பெறுமதியுடைய மாணிக்கக்கல் இருப்பதாகவும் அதனை விற்பதற்கு ஒருவரைத் தேடித்தருமாறும் தன்னிடம் கோரியதாக அப்பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அச்சமயம் அவ்விடத்திற்கு வந்து மற்றொருவர் அக்கற்களைப் பார்த்து அவை மிகப் பெறுமதியானது என்றும் தன்னிடம் பணம் இருந்தால் உடனே வாங்குவதாக கூறியதாகவும் அப்பெண் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்களின் கதையை நம்பி ஏமாந்த அப்பெண், பணம் இல்லையெனக் கூறி தன்னிடமுள்ள தங்க நகைகளை கொடுத்து மாணிக்கல்லை பெற்றுக்கொள்ள சம்மதித்தார். இந்நிலையில், அப்பெண் சந்தேக நபரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று சுமார் மூன்றரை இலட்சம் பெறுமதியான நகைகளைக் கொடுத்து குறித்த பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்பட்ட போலி மாணிக்கக் கற்களை வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக வீரக்கொடியின் ஆலோசனைக்கமைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி அமித ரஞ்சித் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago