2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆனமடுவ துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ், மும்தாஜ்)

ஆனமடுவ, சங்கட்டிக்குளம் சந்தியில்  நேற்று இரவு  ஒருவர்  சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சங்கட்டிக்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஸ்டேன்லி சில்வா (வயது 44) எனும் வர்த்தகரே கொல்லப்பட்டுள்ளதாக அடையாளங்கானப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சுட்டினால் படுகாயமடைந்த குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .