2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

'பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு அனுமதியளிக்கமாட்டோம்'

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பயங்கரவாதம் மீண்டும் இலங்கையில் தலைதூக்குவதற்கு அனுமதியளிக்கமாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாதுறு ஓயா யுத்த பயிற்சி பாடசாலையிலிருந்து பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறிய இராணுத்தினர் மத்தியில் இன்று சனிக்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதற்காக பாதுகாப்பு படையினர் முன்னெச்சரிக்கையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த யுத்த பாடசாலையிலிருந்து 11 அதிகாரிகளும் 443 இராணுவத்தினரும் பயிற்சிகளை முடித்துக்கொண்டு இன்று வெளியேறினர்.

கடந்த 25 வருடத்தில் அதிக கூடிய எண்ணிக்கையான இராணுவத்தினர் பயிற்சி பெற்று வெளியாகியது இதுவே முதற் தடவையாகும். (DM


  Comments - 0

  • xlntgson Saturday, 11 December 2010 09:30 PM

    தீர்வுத்திட்டம் ஒன்று இல்லாவிட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக உள்ளங்களில் தலை தூக்கிக்கொண்டுதான் இருக்கும்! தமிழர்கள் அரசை சுற்றி வருகின்றார்கள் என்றறிந்தால் எதிர்க்கட்சிகள் பேரினவாத அரசியலைப் பற்றிப்பிடித்துக் கொள்வர் ஆகவே கூடிய சீக்கிரத்தில் தீர்வை அறிவியுங்கள் தேர்தலைக்கிட்ட வைத்துக்கொண்டு செய்ய நினைக்க வேண்டாம். நீங்கள் அரசியலுக்கு அப்பால் சிந்திக்கக் கூடியவர் என்பதால் நான் நம்பிக்கை வைக்கின்றேன் செய்வீர்கள் என்று!
    ஜனபதியும் மனதில் இருக்கிறது லண்டனில் கூற நினைத்தேன் என்கிறார், நல்ல நேரம் பார்த்து

    Reply : 0       0

    xlntgson Sunday, 12 December 2010 08:46 PM

    தீர்வுதிட்டம் ஒன்றை அறிவிப்பதன் மூலம் இந்தியாவையும் திருப்திப்படுத்தி விடலாம்.
    எங்கே அதை மறுத்துவிடுவார்களோ என்ற எண்ணம் இருப்பின் முதலில் அவர்களுக்கு சமர்ப்பித்து அதன் பின் தமிழ் கூட்டமைப்பு & தமிழ் அரங்கங்களின் பார்வைக்கு வைத்து வெளியிடலாம்! பாராளுமன்றில் ஐதேக அதை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கவே செய்யும் என்று சமுசயப்படஇடமிருக்கிறது.
    இந்தியா ஒருபோதும் தமிழருக்கு சார்பாக சிங்களவருக்கு ஓரவஞ்சகம் செய்யாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் அது போலவே தமிழ் அரங்கங்களும் செயல் பட வேண்டும் உடன்பட்டு.

    Reply : 0       0

    xlntgson Monday, 13 December 2010 09:12 PM

    உலகில் பலவிதமான கொள்கைகளை பின்பற்றும் நாடுகள் கடற்படை 60ஆம் ஆண்டு கொண்டாட்டங்களில் பங்குபற்றுவது நீங்கள் கூறுவது போல இலங்கையின் கேந்திர முக்கியவத்துவத்தைக் காட்டுகிறது
    5 வல்லரசுகளும் புறக்கணிக்கவில்லை
    உலகில் இந்தியாவையும் சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் வல்லமை இலங்கைக்கே இருக்கிறது
    நடபுரீதியான சந்திப்பு என்றாலும் கூட இவ்வாறான summit-சந்திப்புகளில் தான் புதுமைகள் புரியப்படும்!
    சோமாலியக்கடற்கொள்ளைக்காரர்கள் கூட கொஞ்சம் சிந்திக்கத்தொடங்குவர்உலகம் விழித்துக்கொண்டது கொழும்பில் என்று!
    வெற்றி நமதே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .