2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தம்புள்ளையில் கடத்தப்பட்ட பெண் கைவிடல்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிபாத்)

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடத்திச் செல்லப்பட்ட பெண்ணொருவர் கடத்தல்காரர்களால் கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைவிடப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு  நேற்று புதன்கிழமை முச்சக்கரவண்டியில் வந்த இருவர், அங்கு ஆயுர்வேத மருந்து வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கடத்திச் சென்றிருந்தனர். இந்நிலையில், கையடக்க தொலைபேசியூடாக 2 இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக கடத்தல்காரர்கள் கோரியிருந்தனர்.

இது தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையிலேயே, கடத்திச் செல்லப்பட்ட இப்பெண் கொழும்பு பிரதேசத்தில் தற்போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .