2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க.உறுப்பினர் பொலிஸில் சரண்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

 

சிலாபம், சேதவத்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையதான ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினரான சாந்த சிசிர குமார சற்று முன்னர் சிலாபம் பொலிஸில் சரணடைந்தார்.

மேற்படி துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்த மூவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையிலேமே குறித்த மாகாணசபை உறுப்பினர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

மாகாணசபை உறுப்பினரான சாந்த சிசிர குமார நேற்றிரவு மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சேதவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சாமர மற்றும் சமன் தில்ருக்ஷன ஆகிய இருவரும் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, சாந்த சிசிர குமாரவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் டீ.ஏ.சஞ்ஜீவ என்பவரும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த மாகாணசபை உறுப்பினரும் சம்பவத்தை அடுத்து நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.

கடந்த ஏப்ரில் மாதம் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதான பிரதான சந்தேகநபராக மேற்படி மாகாணசபை உறுப்பினர் சாந்த சிசிர குமார அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .