2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தம்புள்ளை வாகன விபத்தில் அறுவர் படுகாயம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)
 
தம்புள்ளை திகம்பத்த என்னும் இடத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ கேணல் உட்ப அறுவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 6 மணியளவில் தம்புள்ளை - ஹபரணை வீதியில் திகம்பத்த என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளையிலிருந்து வெலிகந்தை பிரதேசத்தை நோக்கி சென்ற இராணுவ பஸ் வண்டி ஒன்றும் தம்புள்ளையை நோக்கி வந்துகொண்டிருந்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தின்போது இராணுவ பஸ்ஸின் சாரதி கேணல் ஒருவருட்பட ஆறு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். லொறியின் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியின் நிலைமையும் லொறி சாரதியின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் எம்.இக்பால் தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .