2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை

Super User   / 2011 ஜனவரி 02 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

ஹொரவப்பொத்தானை பகுதி வீதிகளில் தரித்து நிற்கும் கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்க ஹொரவப்பொத்தானை பொலிஸாரும் ஹொரவப்பொத்தானை பிரதேச சபையும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

பாதைகளில் தரித்து நிற்கும் கட்டாக்காலி மாடுகளினால் ஹொரவப்பொத்தானை பகுதியில் வீதி விபத்துக்கள் அதிகரித்துவருவதனால் மாடுகளை தொழுவங்களில் இடுமாறு மாட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அறிவித்தனர்.

எனினும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காததனால் பொலிஸாரும் பிரதேச சபையும் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

பிடிக்கப்படும் மாடுகளை ஹொரவப்பொத்தானை பிரதேச சபை வளாகத்தில் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .