Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 12 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பாரிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டள்ளதாக மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் பளுகஸ்வௌ தெரிவித்தார்.
ராஜாங்கனை, நுவரவாவி, திஸாவாவி, கலாவாவி, நாச்சியாதீவு, வா{ல்கட ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நாச்சியாதீவு, நுவரவாவி குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அநுராதபுரம் பிரதான வீதியிலுள்ள மாத்தளை சந்தி நீரில் மூழ்கியுள்ளது.
இதேவேளை மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதால் அநுராதபுரம் ஜயந்தி மாவத்தை மற்றும் லேன் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு பல வீடுகளும் நீரில் மூழகியுள்ளன.
மேலும் ஹொரவப்பொத்தானை பிரதேசத்திலுள்ள குளத்தின் அணைக்கட்டொன்று உடைப்பெடுத்ததையடுத்து ஹொரவப்பொத்தானை நகரம் உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனையடுத்து சுமார் 1,115 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பிரதேச செயலாளர் சாந்த தஸநாயக்க தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளிலும் விகாரைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக கஹட்டகஸ்திகிலிய பிரதான வீதியும் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் ரம்பாவை நகரம் மற்றும் மதவாச்சியின் சில பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் இதுவரை பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் காணிகள் நீரில் மூழ்கியுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்தில் இதுவரை வெள்ளப்பெருக்கு காரணமாக 1,800 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago