2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தளத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக புத்தளத்தில் நிவாரணப் பொருட்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன.

புத்தளம் பெரிய பள்ளியின் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் இடம்பெற்று  வருகின்றன.  நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி தொடர்ந்து இடம்பெறுமென புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஆர் எம்.முஸம்மில் தெரிவித்தார்.    

உலர் உணவுப்  பொருட்களான பால்மா பக்கட்,  தேங்காய்,  போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போன்ற பொருட்களுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை,  நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பு  பெறுவதற்காக  ஐந்து வேளைத் தொழுகையில் குனூத் ஓதப்பட்டு வருகின்றது.


  Comments - 0

  • Haseen Thursday, 13 January 2011 03:30 PM

    இறைவன் தந்த அருள்களை மற்றோருக்கு வாரி வழங்குவதில் புத்தளம் மக்களுக்கு நிகர் அவர்களே ...அல்லாஹ் என்றும் இந்த மக்களை அதே மன நிலையோடும் பாதுகாப்போடும் வாழ வைப்பானாக ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .