2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நீலபெம்ம ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

புத்தளம் - அநுராதபுர வீதியில் கலாஓயா பாலத்திற்கு கீழே நீலபெம்ம ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கடந்த 12ம் திகதி கலாஓயா பாலத்திற்கு அருகில் ஆற்றில் வீழ்ந்ததாகச் தெரிவிக்கப்படும் இளம் பெண்ணுடையதாவென்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக  சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் (வயது 17) கடந்த 11ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் சாலியவெவ பொலிஸில் முறைப்பாடு  செய்திருந்தனர்.

இதனையடுத்து, விசாரணை நடத்திய  பொலிஸாரிடம், கடந்த 12ஆம் திகதி காலையில் இளம் பெண்ணொருவர்  பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்ததைத் தான் கண்டதாக முச்சக்கரவண்டி சாரதியொருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இராணுவத்தினர், பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் கலாஓயா ஆற்று பிரதேசத்தில் குறித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டபோது,  நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.

சாலியவெவ பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி டப்.பீ.ஆர்.அபேநாயக தலைமையில் இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .