2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 31 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் ஆராச்சிக்கட்டு பிரதேசசபைக்குட்பட்ட அங்குனவில கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  திறந்து வைத்துள்ளார்.


இதற்கென 10 இலட்சம் ரூபாய் ஜாதிக சவிய மற்றும் கமநெகும திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
நீண்டகாலமாக தற்காலிக கட்டடிடமொன்றில் இயங்கி வந்த முன்பள்ளி பாடசாலையும் இன்றைய தினம் இக்கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகளை ஏ.எச்.எம்.அஸ்வர் இதன்போது வழங்கி வைத்தார். முந்தல் பிரதேச செயலக்ளர் எம்.ஆர்.எம்.மலிக், ஆராச்சிக்கட்டு பிரதேசசபை முன்னால் தலைவர் ஜகத் நிசான்த, முன்னால் உறுப்பினர்,  எம்.ஷரீப் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .